Monday, 2 January 2012

2013 இல் விண்வெளியிலிருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்

          விண்வெளியில் பறந்து பூமிக்கு மேல் தொங்கிக் கொண்டு உலக காட்சிகளை பார்ப்பது என்பது சிலிர்க்க வைக்கும் சாகசமாக இருக்கும். இந்த வித்தியாசமான பயணத்திற்கு ஆகும் செலவு 5 மணி நேரத்திற்கு 90 ஆயிரம் டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. பூமியின் கடைசி வளைவுப் பகுதியை ஹீலியம் நிரப்பப்பட்ட பலூனிலிருந்து பார்த்து ரசிக்கலாம். இப்படி பயணம் செய்பவர்கள் சூரிய உதயத்தை பார்க்கும் முதல் மனிதர்களாகவும் இருப்பார்கள். அப்படி ஒரு ஹீலியம் பலூன் விண்கலத்தை ஸ்பெயின் ஜோஸ் மரியானோ லோபஸ் என்ற தொழிலதிபர் உருவாக்கி உள்ளார்.
          பூமியின் தரைமட்டத்திற்கு மேல் 22 மைல் பயணம் செய்பவர்கள் செல்லும் கலம் 2 பைலட்டுகள் மற்றும் 4 பயணிகள் அமரும் வகையில் உள்ளது. இந்த விண்கலத்துடன் 423 அடி விட்டம் கொண்ட ஹீலியம் பலூனும் இணைக்கப்பட்டு இருக்கும். ஹீலியம் வாயு எந்த ஒரு பொருளையும் உயரத்தில் கொண்டு செல்லக்கூடிய தன்மை படைத்தது. இந்த கலம் விண்வெளிப் பகுதியை அடைய சுமார் ஒரு மணி நேரம் ஆகும். அதன் பின்னர் 3 மணி நேரம் பூமிக்கு மேல் பயணம் செய்த பின்னர் மீண்டும் பூமிக்கு திரும்பும்.

       குறைந்த அதிசிறந்த  இக்கேள்விக்கு விடை தேடுவதற்கு முன்பாக ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு வெள்ளை நிறக் கதிரானது  ஊதா, கருநீலம்,  நீலம், பச்சை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு என ஏழு வகையான கதிர்களை உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு கதிருக்கும் வெவ்வேறு  அலைநீளமும்,  அதிர்வெண்ணும் உண்டு.
           (இதெல்லாம் நீங்கள் சின்ன வயதில் படித்தது தான்!).  சூரியக்கதிர்கள்  அண்டத்தில்  நேர்க் கோட்டில் பயணிக்கும்.  அப்படிப் பயணிக்கும் போது ஒரு மூலக்கூற்றையோ, தூசியையோ எதிர்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு அல்லவா? அத்தூசியின் தன்மையைப் பொறுத்து கதிர்களின் செயல்பாடு மாறுபடுகிறது.
       சூரியக்கதிர்கள் நம் காற்று மண்டிலத்தின் தூசித்துகள்கள் மீது மோதும் பொழுது அவை பெரும்பாலும் அப்படியே எதிரொளிக்கப்படுகின்றன. எதிரொளிக்கப்பட்ட கதிர்கள் வெள்ளை நிறத்திலேயே தோற்றமளிக்கும். இதற்குக் காரணம் தூசித் துகள்கள் கதிர்களை உட்கொள்ளாமல் அப்படியே விட்டுவிடுகின்றன.  எனவே கதிர்கள் அப்படியே எதிரொளிக்கப்படுகின்றன. ஆனால் காற்று மூலக்கூறுகள் மீது மோதும் பொழுது, இதற்கு நேர்மாறாகக் காற்று மூலக்கூறுகள்  அதில் பெரும்பான்மையான கதிர்களை உட்கொள்கின்றன.
       இதில் அதிக அலைநீளம் கொண்ட கதிர்கள் (சிவப்பு) தப்பிப் போய் விடுகின்றன. ஆனால் குறைவான அலைநீளம் கொண்ட கதிர்களை (நீலம்) காற்று மூலக்கூறுகள் விடாமல் உட்கொள்கின்றன.  இவ்வாறு உட்கொள்ளப்பட்ட நீல நிறம் கதிர் வீச்சடைந்து பல திசைகளில் சிதறடிக்கப்படுகிறது. இதனால் தான் நமக்கு வானம் நீல நிறத்தில் தோற்றமளிக்கின்றது.

ஒரே ஒரு நுளம்புத்திரி எரியும் போது வரும் புகை 100 சிகரெட்டுக்களுக்கு சமமான பாதிப்புக்களை உண்டு பண்ணும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.  இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் நுளம்புகளை ஒழிப்பதற்கு இந்த நுளம்புத்திரிப் பக்கெட்டுக்கள் அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் சுவாசக்குழாய்கள் மற்றும் நுரையீரல் போன்றன பெருமளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடுமையான பாதிப்புக்களை பொதுமக்கள் அறியாமல் உள்ளனர். இந்த ஆய்வை மலேசியாவைச் சேர்ந்த இதய நோய் சிறப்பு நிபுணர்கள் மேற்கொண்டுள்ளனர்.
        ஒரு குறிப்பிட்ட திசையிலிருந்து வீசக்கூடிய குளிர்ந்த காற்று மற்றும் வறண்ட காற்று அதன் எதிர்திசையிலிருந்து வீசக்கூடிய சூடான காற்று மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகிறது. இப்படிப்பட்ட பல்வேறு வகையான காற்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது அதிலிருந்து வெளிப்படும் விசையே சூறாவளி எனப்படுகிறது.
       இந்த மோதல்கள் அதிகமான அளவு நடை பெறும்போது அந்த சூறாவளிக்கு பலம் கூடுகிறது. இதற்கு பெயர்தான் டொர்னடோ எனப்படுகிறது.  டொர்னடோ என்ற பயங்கரமான சூறாவளி வீசுவதற்கு முன்னர் ஆலங்கட்டி மழைகள் ஏற்படுமாம். அந்த ஆலங்கட்டியின் தாக்கம் வீடுகளின் கூரைகளைத் துவம்சம் செய்துவிடுமாம்.
வானத்தில் ஒரு பயங்கரமான சூறாவளி உருவாகிவிட்டால் அந்த சூறாவளி நிலத்தை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வெறும் 12-13 நிமிடங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 13ஆம் வினாடியிலிருந்து இந்த சூறாவளி நிலத்தைப் பதம் பார்த்து அக்குவேறு ஆணிவேராகப் பிடிங்கி அதை தனக்குள் வசப்படுத்திக்கொண்டு அதே வேகத்தில் நகர ஆரம்பிக்குமாம்.
மனிதர்கள், கால்நடைகள் கூட இந்த சூறாவளியில் சிக்கி வீசப்படுகிறது. சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு வீட்டின் கூரைகளின் மேல் நிற்குமளவுக்கு பயங்கரமானது இந்த அதிபயங்கர சூறாவளிகள்.

நள்ளிரவிலும் சூரியன் உதிக்கும்



         சூரியன் காலையில் கிழக்கில் உதிக்கும். மாலையில் மேற்கில் மறையும். அப்படிதான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், நள்ளிரவிலும் சூரியன் உதிப்பதை நம்ப முடிகிறதா? பூமியின் வட துருவங்களில் தான் இந்த நிகழ்வுகள் நடக்கிறது. இங்கு சூரியன் மறைவது இல்லை. அதுவும் குறிப்பாக, ஜூன், ஜூலை மாதங்களில் இங்கு நாள்முழுவதும் பகலாகத் தான் இருக்கும்.
            ஏன் இங்கே மட்டும் இப்படி நடக்கிறது? பூமியோட வடதுருவம் ஒரே அச்சில் மேல்நோக்கி சுழல்வதுதான் இதற்கு காரணம். இப்படியே பகல் முதல் நள்ளிரவு வரை தொடருகிறது. அப்புறம் என்னவாகும்? மறுநாள் வந்துவிடும். சூரியன் மறையவே மறையாது. இதுவே தொடர்ந்து நடக்கிறதால், இங்குள்ள மக்களுக்கு நள்ளிரவிலும் சூரியனைப் பார்க்கும் அனுபவம் உண்டு.
அதேபோல் இந்த பகுதிகளில் இன்னொரு நிகழ்வும் நடக்கிறது. அதாவது, டிசம்பர், ஜனவரி மாதங்களில் சூரியனை பார்க்க முடியாது. வட ஆர்க்டிக் பகுதியில் உள்ள நாடு ஸ்காண்டிநேவியா. இங்கு நார்வே, ஸ்வீடன், டென்மார்க், அய்ஸ்லாந்து, பாரோ தீவுகள், பின்லாந்து போன்ற பகுதிகள் இங்குள்ளன.



            பூமியின் புவியீர்ப்பு விசையைக் காட்டிலும் சந்திரனின் ஈர்ப்பு விசை ஆறு மடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை இருப்பதால்தான் அந்த விசை காற்று மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது. அத்தகைய விசை சந்திர னுக்கு இல்லாததால் அங்கே காற்று இல்லை. சந்திரனோடு ஒப்பிடும்போது செவ்வாயின் ஈர்ப்பு விசை கொஞ்சம் பரவாயில்லை.
            பூமியின் ஈர்ப்பு விசையின் பாதியளவு உள்ளது.  இதன் காரணமாக அங்கே கொஞ்சம் காற்று உள்ளது. எனவேதான் அங்கு உயிர்கள் வாழ வாய்ப்பிருப்பதாக விஞ் ஞானிகள் தெரிவிக்கின்றனர். வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு விசை பூமியைக் காட்டிலும் 350 மடங்கு அதிகம். இந்த ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு நாள்தோறும் விண்கற்கள் வியாழனில் விழுந்து கொண்டேயிருக்கின்றன. வால் நட்சத்திரங்களும் அடிக்கடி வந்து மோதுவது உண்டு. இந்த அபாயகரமான ஈர்ப்பு விசையால் வியாழனில் மனிதன் உயிர் வாழ இயலாது.


          Ultra Slow motion காமெராக்கள் தான் கிரிக்கெட் போட்டியில் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றன.
இந்த வகை காமெராக்கள் ஒரு வினாடிக்கு 1000 ஷாட் வரை எடுக் கக் கூடியவை. இதுவரை வினாடிக்கு 1 மில்லியன் ஷாட் எடுக்கக் கூடிய காமெராக்கள் தான் அதிகபட்சமாக இருந்து வந்தது. இந்த காமெரா மூலம் ஒரு துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டு செல்வதை கூட எளிதாக படம் பிடிக்க முடியும்.
ஆனால் இதையெல்லாம் மீறி யாருமே யூகிக்க கூட முடியாத அளவுக்கு வினாடிக்கு 1 ட்ரில்லியன்  Frames எடுக்க கூடிய புதிய காமெராவை இந்திய MIT விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார்.
          இந்த புதிய காமெராவினால் ஒரு லிட்டர் பாட்டிலில் ஒளி செல்லும் வேகத்தை கூட எளிதாக படம் பிடிக்க முடியும். அதாவது ஒளி எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை காட்ட முடியும். இந்த காமெராவை  MIT விஞ்ஞானி Mr. Ramesh Raskar's கண்டுபிடித்துள்ளார்.
           சமீபத்தில் The Eye Netra என்ற விலை குறைந்த கருவியை இவர் உருவாக்கினார். இந்த கருவியின் மூலம் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி உங்களின் கண்களை பரிசோதனை செய்து கொள்ள முடியும்.