Saturday 5 January 2013

நான்கு வெவ்வேறு சூரியன்களிலிருந்து ஒளியை பெறும் கோள் கண்டுபிடிப்பு


பூமியிலிருந்து 5000 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள ‘பி ௭ச் 1’ ௭ன்றழைக்கப்படும் இந்தக் கோள், இரு நட்சத்திரங்களை வலம் வருவதுடன் மேலும் இரு நட்சத்திரங்களிலிருந்து ஒளியைப் பெறுகிறது.

இந்தக் கோள் அமெரிக்க மற்றும் பிரித்தானிய விண்வெளி ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நான்கு வெவ்வேறு சூரியன்களால் ஒளியூட்டப்படும் கோளொன்று விண்வெளி ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இத்தகைய கோளொன்று கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

விண்வெளியில் புதுக்கிரகம் கண்டுபிடிப்பு


விண்வெளியில் புதிய கிரகம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வைர கிரகம் என கூறப்படும் இந்த கிரகம் பூமியின் அளவை விட இரண்டு மடங்கு பெரிதாகவும், 8 மடங்கு எடை அதிகமாகவும் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கிரகத்தில் தண்ணீர் மற்றும் கிரானைட் இல்லை. ஆனால் கிராபைட் மற்றும் வைரம் ஆகியவை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கிரகத்துக்கு விஞ்ஞானிகள் கார்ன்ரி 55 இ என பெயரிட்டுள்ளனர்.