Wednesday 21 March 2012

மனித உடலமைப்பு-சுவாரஸ்யமான தகவல்கள்


பல அதிசயங்களை கொண்டதே மனித உடலாகும். மனித உடலின் ஆச்சர்யமான தகவல் தொகுப்பு இதோ:
நுரையீரலில் 300,000 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் கோர்க்கப்பட்டால், அதன் நீளம் 2400 கிலோமீட்டராக (1500 மைல்) ஆக இருக்கும். ஒரு ஆணின உடலில் ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் புதிய விந்து செல்கள் உருவாகின்றன. அவர் மட்டுமே ஒரு முழு கிரகத்தின் மக்கள் தொகையை 6 மாதங்களில் நிரப்ப முடியும். மனிதன் தூங்கிக்கொண்டிருக்கும் போது, அவருடைய உயரம் 8mm அதிகரிக்கும். தூங்கி எழுந்த பிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார். இதற்கு காரணம், மனிதன் உட்காரும்போது, அல்லது நிற்கும் போது, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்ப்படும் அழுத்தமாகும். ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை (FILTERS) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது. மனிதன் தன் வாழ்நாளில் தோராயமாக 50 டன் உணவையும், 50,000 லிட்டர் நீராகாரத்தையும் உட்கொள்கிறான். கண்களின் தசையானது ஒரு நாளில் 100,000 முறை அசைகிறது. அதற்க்கு சமமான வேலையை உங்கள் கால்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் நடக்க வேண்டும். ஒரு சராசரி மனித உடல் 30 நிமிடங்களில், அரை கேலன் தண்ணீரை கொதிப்பதற்க்கு தேவையான வெப்பத்தை கொடுக்கிறது. ஒரு பெண்ணின் கருப்பையில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கரு முட்டை செல்கள் இருந்தாலும் 400 அல்லது சற்று மேற்ப்பட்ட செல்களுக்கு மட்டுமே புதிய உயிரை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். மனிதனின், ஒரு தனித்த ரத்த அணு, மனிதனின் முழு உடலையும் சுற்றி வர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். மனித உடலின் மிகப்பெரிய செல் பெண்ணின் கருமுட்டையாகும். மனித உடலின் மிகச்சிறிய செல் ஆணின் விந்தாகும். மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சராசரி பெண்ணின் உயரம், ஒரு சராசரி ஆணின் உயரத்தை விட 5 இஞ்ச் குறைவாகும். காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளை கொண்டிருக்கும். ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளை கொண்டிருக்கும். ஒரு மனிதனின் ஒரு ஜோடி பாதங்களில் 250,000 வியர்வை சுரப்பிகள் உள்ளது. மனிதனின் வயிற்றில் உள்ள செரிமான அமிலமானது துத்தனாகத்தையே கரைக்கும் சக்தி கொண்டது. ஒரு மனிதன் மூளையில் பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை போல் ஐந்து மடங்கு தகவல்களை சேமித்து வைக்க முடியும். மார்பில் முடி இல்லாத ஆண்களுக்கு, மார்பில் மூடியுள்ள ஆண்களை விட “CIRRHOSIS” (ஈரல் நோய்) என்ற நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம். பற்களின் எனாமல் தான் மனித உடலில் உள்ள கடினமான பொருளாகும். கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் சமமாகும். மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பாக்டீரியாக்கள் இருக்கும்.                                                           

நீங்கள் Gmail கணக்கு பயன்படுத்துபவரா?


அப்படியானால் இதனை கண்டிப்பாக படியுங்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் கணக்கு முடக்கப்பட்டாலோ அல்லது உங்களது மெயில்களை நீங்களே தவறுதலாக் அழித்துவிட்டாலோ என்னசெய்வது முக்கியமான மெயில்களை எவ்வாறு மீட்பது இனிமேல் அந்தக்கவலை வேண்டாம் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள மென்பொருளினை தறவிரக்கி உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள் அவ்வளவுதான்.
உங்கள் மெயில்கள் எல்லாவற்றையுமாயினும் சரி குறிப்பிட்டவற்றை மட்டுமாயினும் சரி இந்த gmail backup மென்பொருளின் இதவியுடன் backup செய்து உங்களிட்குத் தேவையான

இடத்திலொ அல்லது USB போன்றவற்றிலோ செமித்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள் இதன் சிறப்பம்சம் என்னவெனில் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமானது இதனை பதிவிரக்க கீழ் உள்ள லிங்கில் கிளிக் செய்யுங்கள்.http://www.mediafire.com/?ddg69mdcg0pgjay
உங்கள் கணனியில் நிறுவியதும் இங்கு உள்ளபடத்தில் இருப்பதுபோன்று காணப்படும் அதில் உங்கள் மெயில் முகவரி,கடவுச்சொல் அதன்பின் எங்கு சேமிக்க வேண்டும் எனதெரிவுசெய்யுங்கள் அவ்வளவுதான் குறிப்பிட்ட திகதிகளில் வந்த மெயிலினை மட்டும் backup எடுக்க வேண்டுமாயின் அதில் இருக்கும் newset emailonlyl என்பதில் இருக்கும் டிக்கினை எடுத்துவிட்டு உங்களிட்கு தேவையான திகதியினை தெரிவு செய்துகொள்ளுங்கள்

அழகென்றால் ஆபத்தும் இருக்கும் என்பது உண்மை தானோ?


பார்ப்பதற்கு அழகான இவ்வகைப் பாம்பு மலேசியாவுக்கு உரித்தான நீலப் பவளப் பாம்பு அல்லது நீல மலேசிய பவளப் பாம்பாகும்.
சுமார் 5 அடி நீளம் கொண்ட இது கொடிய விஷமுடையது. இப் பாம்பு தீண்டினால் மரணம் நிச்சயம்.
இதன் உடல் முழுவதும் நீல நிறத்திலான வரியும் தலையிலும் வாலிலும் பிரகாசமான சிவப்பு நிறமும் காணப்படும்.
மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளிலும் இவ்வகைப் பாம்புகள் உள்ளன.
இது பல்லி, தவளை, பறவைகள் என்பவற்றோடு பிரதான உணவாக மற்றைய பாம்புகளை உட்கொள்கிறது.
இந்நீலப் பவளப் பாம்பு விதிவிலக்காக நீண்ட விஷச் சுரப்பியைக் கொண்டுள்ளது.
இவ்வகைப் பாம்பு தீண்டினால் ஆரம்பத்தில் அறிகுறிகள் எதுவும் தெரியாது. பல நிமிடங்களுக்குப் பின் உணர்வின்மை ஏற்படுவதோடு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். சுவாசச் செயலிழப்பு காரணமாகவும் மரணம் சம்பவிக்கலாம்

பெண்கள் அழுதால் ஆண்கள் வெறுப்பது ஏன்?


நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஓன்னு கூப்பாடு போட்டு, அழுறே… இந்த வாசகம் கேட்காத வீடுகளே இருக்க முடியாது. அந்த அளவுக்கு கணவன், மனைவி இடையே நடைபெறும் சின்னச் சின்னச் சண்டைகளின்போது மூக்கைச் சிந்தாத மனைவிகளைப் பார்க்காமல் இருக்க முடியாது.
மேலும் பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுகிறார்கள் என்பது ஆண்கள் பொதுவாக வைக்கும் புகாராகவும் உள்ளது. சில இடங்களில் விதி விலக்காக, பெண்களால் ஆண்கள் அழுகிற சம்பவங்களும் நடைபெறுகிறது, அது வேறு விஷயம்.
ஆனால் பெண்கள் அழும்போது அதை ஆண்கள் வெறுக்கிறார்களாம். அழுதே காரியத்தை சாதித்து விடுகிறார்கள் என்றும் எரிச்சல்படுகிறார்களாம். மேலும் தங்களுக்கு ஏதாவது காரியம் சாதிக்க வேண்டுமானால், கர்ச்சீப்பும் கையுமாக கிளம்பி விடுகிறார்கள் பெண்கள் என்பது ஆண்களின் புலம்பலாக உள்ளது.
பெண்கள் அழும்போது ஆண்கள் சந்திக்கும் அவஸ்தைகளாக இதைக் கூறுகிறார்கள்…
ஒரு பெண் அழத் தொடங்கி விட்டால்,ஆண்களுக்கு கையும் ஓடுவதில்லையாம், காலும் ஓடுவதில்லையாம். எப்படி இந்த அழுகையை சமாளித்து சமாதானப்படுத்துவது என்பதில் அவர்களுக்குக் குழப்பம் ஏற்படுகிறதாம். சமாதானப்படுத்த முயன்றால் அழுகை கூடுமாம், அவர்கள் கோருவதை நிறைவேற்றுவதாக அல்லது கவனிப்பதாக உறுதியளித்தால் மட்டுமே அழுகை குறைகிறதாம். இது சமயத்தில் ஆண்களுக்கு எரிச்சலைக் கொடுக்கிறதாம்.
பொது இடங்களுக்கு, கடை போன்றவற்றுக்குச் செல்லும்போது தான் கேட்டதை அல்லது விரும்பியதை வாங்கித் தராமல் போகும் ஆண்களிடம், காரியம் சாதிக்க பல பெண்கள் பொது இடம் என்றும் பாராமல் கண்களை கசக்குகிறார்களாம். அப்போது ஆண்களுக்கு பெரும் தர்மசங்கடமாகி விடுகிறதாம். பொது இடத்தில் தான் ஒரு ஜென்டில்மேனாக நடந்து கொள்ளத்தான் ஒவ்வொரு ஆணும் விரும்புவானாம். எனவே இதைப் பயன்படுத்தி பல பெண்கள் கண்களை கசக்கியோ அல்லது கசக்குவது போல நடித்தோ காரியத்தை சாதித்துக் கொள்கிறார்களாம். இதுபோன்ற சம்பவங்களில் ஆண்களுக்கு செம டென்ஷனாகி விடுகிறதாம். இருந்தாலும் பொறுத்துக் கொண்டு, சரி சரி அழாதே, வாங்கித் தர்றேன் என்று பல்லைக் கடித்தபடி கூறி அமைதிப்படுத்துகிறார்களாம்.
சாதாரண பிரச்சினைகளைக் கூட பெரிய ரேஞ்சுக்கு பில்டப் செய்து சீன் கிரியேட் செய்கிறார்கள் பெண்கள் என்பது பல ஆண்களின் புகாராக உள்ளதாம். ஒண்ணுமே இல்லாத பிரச்சினையைப் பெரிதாக்கி கண்ணீர் வடிக்கிறாங்க என்கிறார்கள் அவர்கள். அதாவது சும்மா கேட்டால் கிடைக்காது என்று கருதும் விஷயத்தை கண்ணீர் கலந்து கேட்கிறார்களாம் பெண்கள். இதையும் பல ஆண்கள் விரும்புவதில்லையாம்.
நேர்மையாக, நேருக்கு நேர், தைரியமாக, தெளிவாக பேசி கேட்கும் பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கிறதாம். மற்றபடி கண்ணீர் விட்டு காரியம் சாதிக்க நினைக்கும் பெண்களை ஆண்கள் வெறுக்கிறார்களாம்.
உங்க கேஸ் எப்படி…?

மன அழுத்தம் பறந்து போக ஐ லவ் யூ சொல்லுங்கள்…


அன்பிற்குரியவர்களின் புகைப்படத்தை பார்த்தாலே எத்தகைய உடல்வலியும், மனவலியும் பறந்து போகும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பார்ப்பதற்கே இப்படியா என நினைக்கவேண்டாம். அதேபோல் நேசத்திற்குரியவர்களை சந்தித்து ஐ லவ் யூ சொன்னால் போதுமாம் மன அழுத்தம் காணாமல் போய்விடும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கலிபோர்னியா பல்கலைகழக உளவியல் துறை பேராசிரியர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். 25 பெண்களை தேர்வு செய்தனர். அவர்களின் கையில் லேசாக சூடு வைத்தனர். “ஆ” என அலறித் துடித்த பெண்களிடம் ஏற்கனவே சேகரித்து வைத்திருந்த அவர்களது ஆண் நண்பர்களின் படத்தை அந்தந்த பெண்ணிடம் கொடுத்தனர்.
தனது அன்புக்குரியவரை பார்த்த விநாடியில் பெண்களின் இதழில் புன்னகை தோன்றியது. அவர்களது காயத்தின் வலி தணிந்தது. படத்தை பார்த்ததற்கே இப்படியா என வியந்த ஆய்வாளர்கள் அவரவர் துணையை நேரில் வரவழைத்தனர். அவர்களிடம் லேசாக அணைத்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அப்போது உடல் வலியும், மன அழுத்தமும் மறைந்து போனது கண்டறியப்பட்டது. அன்பிற்குரியவர் அணைக்கும் போது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பது கட்டுப்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து கடுமையான உடல் வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை அன்புக்குரியவரின் அணைப்பு விரட்டி விடும் என்ற முடிவுக்கு வந்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மனநல கல்வியாளர் டாக்டர் லுட்விக் லோன்ஸ், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக நீடிக்க, தம்பதியர் குறைந்தபட்சம் தினமும் நான்கு முறையாவது அணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
மாதத்திற்கு 2 முறையாவது கைகோர்த்து வாக்கிங் செல்ல வேண்டும். ஒரு முறையாவது சினிமா, டிராமா என்று செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இப்படி செய்து வந்தால் டாக்டர்களை தேடிச் செல்லாமல், மக்களின் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில் அன்பிற்குரியவரை சந்தித்து ஐ லவ் யூ கூறவைத்தனர். அப்போது அவர்களுக்கு காதல் உணர்வு அதிகரித்ததோடு மன அழுத்தம் பறந்து போனதாம்.

ஒரு முத்தத்தின் விலை எவ்வளவு தெரியுமா?


வெளிநாட்டில் வேலை செய்யும் கணவன் தன் மனைவிக்கு ஒரு மெயில் அனுப்பினான்.
என் அன்பு மனைவிக்கு, இந்த மாதம் என்னால் பணம் அனுப்ப இயலாது. அதற்க்கு பதிலாக நூறு முத்தங்களை அனுப்புகிறேன், எனக்கு தெரியும்
என் முத்தங்களை விட உனக்கு பணம் முக்கியமாக இருக்காது என்று.
-அன்புடன் உன் கணவன்.
அதற்க்கு மனைவி இப்படி பதில் அனுப்பினாள்….
அன்பு கணவருக்கு,எனக்கு உங்கள் முத்தங்களை விட பணம் முக்கியமல்ல…. அந்த முத்தங்களை எப்படி சிலவு செய்தேன் என்று விபரம் சொல்கிறேன்.
இந்த மாசம் பால் வாங்கிய பாக்கிக்காக பால் காரனுக்கு ஐந்து முத்தமும்,
மின்சார கட்டணமாக அவனுக்கு பத்து முத்தமும்
நான் வாடகைக்கு இருக்கும் வீட்டு உரிமையாளரிடம் வாடகைக்கு பதிலாக முப்பது முத்தங்களையும்
மளிகை சாமான்களுக்காக மளிகை கடைக்காரனுக்கு இருபது முத்தங்களையும் கொடுத்துவிட்டேன். என்ன ஆச்சர்யம் இவர்கள் அனைவரும் நான் கொடுத்த முத்தங்களை ஏற்றுக்கொண்டார்கள். மீதி இருக்கும் முப்பத்தைந்து முத்தங்களை வங்கியில் சேமிக்கலாம் என்று போனேன். வங்கியின் மேனேஜர் முத்தத்தோடு வேறு எதையோ எதிர்பார்க்கிறார் போல….இப்போது நான் என்ன செய்ய…..உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்

உலகம் வியந்து பார்க்கும் தமிழன் ஒருவன் படைத்த சாதனை:


கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.
இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,
அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர்.
மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.
         அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.
      அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.
         ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார்
.
    அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.
அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான். கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான்.
காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர்.
தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு
பெரிய தொகையை முதலீடு செய்தார்.
நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.
சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம்.
அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.
உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர்.
ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.
இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூ பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.
100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும்.
சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.
ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Wednesday 14 March 2012

நம்பமுடியாத நட்பு:
















Educational Games,Reading,Writing Websites


Educational Games:

The Smart Guide to Financial Aid
http://www.finaid.com
By Kids For Kids
http://www.bkfk.com/


Reading:

Children's Literature Web Guide
http://www.acs.ucalgary.ca/~dkbrown
Project Gutenberg http://www.gutenberg.net
Wowio.com
http://www.wowio.com


Writing:

CRAYON - Create Your Own Newspaper
http://crayon.net
Take Our Word.com
http://www.takeourword.com
The Write Site
http://www.writesite.org



Math & Science Websites

Math:

 
The Math Worksheet Site
http://www.TheMathWorksheetSite.com
 
Math Goodies.com
http://www.mathgoodies.com
 

 
 

Science:



 
 
Imagine the Universe!
http://imagine.gsfc.nasa.gov
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
The Franklin Institute: Learning Resources
http://sln.fi.edu
 
The MAD Scientist Network
http://www.madsci.org
 
The Yuckiest Site on the Internet
http://yucky.kids.discovery.com
 


Top 50 Indian Site






1.
Google India
2003
Search engine
2.
Google
1998
Search engine
3.
Facebook
1991
Social
4.
YouTube
2005
Video Sharing
5.
Yahoo!
1995
Portal
6.
Blogger.com
2005
Social
7.
Wikipedia
2001
Reference
8.
LinkedIn
2002
Social
9.
Twitter
2000
Social
10.
Rediff.com India Ltd.
1996
Portal
11.
Indiatimes.com
1996
News
12.
Wordpress.com
2005
Blogging
13.
googleusercontent.com
2008
E-Commerce
14.
ZEDO.com
1999
E-Commerce
15.
Orkut.co.in
2004
Social
16.
Windows Live
2005
Portal
17.
IN.com
2008
Portal
18.
ESPN Cricinfo
1993
News
19.
Microsoft Corporation
1975
Corporate
20.
Orkut
2004
Social
21.
Snapdeal.com
2010
E-Commerce
22.
Naukri.com
1997
Job Website
23.
Way2sms.com
2006
Messaging
24.
Torrentz.eu
2003
Search Engine
25.
The Internet Movie Database
1996
Entertainment
26.
MSN
1995
Portal
27.
HDFC Bank Ltd
1997
Search Engine
28.
Bing
2009
Search Engine
29.
Tribal Fusion
1998
Ad Network
30.
Clicksor
1998
Ad Network
31.
bp.blogspot.com

Entertainment
32.
Indian Railway Catering and Tourism Corporation
2002
Railways
33.
StumbleUpon
2001
Bookmarking
34.
Amazon.com
1994
E-Commerce
35.
ICICI Bank
1996
Banking and Financial Service
36.
Digg
1996
Bookmarking
37.
eBay India
1995
E-Commerce
38.
ibibo
27
Music
39.
Google UK
1999
Search Engine
40.
OneIndia.in
1993
News Portal
41.
Quikr India

Classifieds
42.
About.com
1999
Portal
43.
Sulekha.com
1998
Classifieds
44.
Moneycontrol.com
1999
Information Provider
45.
Admagnet.net
2007
Ad Network
46.
CNET.com
1994
Technology Site
47.
Flickr
2003
Photo Sharing
48.
Xvideos
1997
Videos
49.
Paypal
1999
Online Payment Network
50.
The Pirate bay
2004
Entertainment