Monday, 2 January 2012

நெருப்பு நெருங்காத மரம்

நெருப்பு நெருங்காத மரம்


                      காட்டுத் தீ பரவும் போது செடி, கொடி, மரங்கள் என சுற்றியிருக்கும் எதனையும் விட்டு-வைப்பதில்லை என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், நெருப்பினைத் தன்னருகில் வரவிடாமல் தடுத்து நிறுத்தும் தன்மை அமையப்பெற்ற மரங்கள் இந்தியாவின் இமயமலைத் தொடர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் காணப்படுகின்றன.
                ரொடோடென்ரன் (Rhododendran) என்ற-ழைக்கப்படும் இந்த மரத்தின் அருகில் நெருப்பு சென்றால், பல அடுக்குகளாக அமைந்துள்ள இதன் பட்டைகளிலிருந்து நீர் வடியத் தொடங்கி-விடும். இதனால் இம்மரத்திற்கு நெருப்பினால் அழிவு ஏற்படாது.
              பரந்த புல்வெளியில் செந்நிறப் பூக்களுடன் காட்சிதரும் இம்மரங்கள் பறவைகளைக் கவர்ந்திழுத்து, பெரும்பாலான பறவைகளின் வாசஸ்தலமாக விளக்குகின்றன. பலத்த காற்றி-னையும் தாங்கக் கூடிய உறுதி படைத்தனவாகவும் திகழ்கின்றன. இம்மரத்தில் காணப்படும் செந்நிற மலர்களிலிருந்து தயாரிக்கப்படும் சாறு மருத்துவத் தன்மை கொண்டது.
             தமிழில் காட்டுப் பூவரசு எனவும் நீலகிரியில் படுகர் மொழியில் பில்லி எனவும் அழைக்கப்-படுகிறது. இம் மலர்கள் போரஸ் என்று பூர்வீகக் குடிகளான தோடர் இனத்தவரால் அழைக்கப்-படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி-களில் (நீலகிரி, ஆனைமலை, பழனி, மேகமலை) கடல் மட்டத்திற்கு மேலே 1500 மீட்டர் உயரத்-திற்கும் அதிகமான பகுதிகளில் இம்மரங்கள் வளர்ந்-துள்ளன. நீலகிரியின் பூர்வீக மரங்கள் என்றும் இதனை அழைக்கலாம்.
                இந்தியாவைத் தவிர இலங்கை, நேபாளம், மியான்மர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் ரொடோடென்ரன் மரங்கள் காணப்படுகின்றன.

Wednesday, 28 December 2011

கல்லறையில் புதைத்த மனைவியை கட்டிலுக்கு அழைத்து வந்த கணவன் (பட காணொளி இணைப்பு)



வியட்நாமைச் சோ்ந்த Le Van என்பவர் அவருடைய மனைவி இறந்த பிறகு மனைவியின் கல்லறை மேல் தூங்கி வந்தார். 

55 வயது மதிக்கதக்க Le Van 2003 ம் ஆண்டு அவருடைய மனைவியை இழந்தார். 

2004 ம் ஆண்டு வரை மனைவியின் கல்லறையில் தூங்கி வந்தார். 

இரவில் மனைவி இல்லாமல் அவரால் தூங்க முடியவில்லை மற்றும் கல்லறைக்கு வெளியே காற்றும் மழையும் அதிகமாக இருந்த காரணத்தால், அவர் கல்லறையில் சுரங்கம் அமைக்க முடிவு செய்தார்.


பின்பு அவருடைய மனைவியை கல்லறையிலிருந்து தோண்டியெடுத்து காகிதம் மற்றும் களிமண்வார்ப்புகளை வைத்து போர்த்தி முகத்தின் மேல் ஒரு முகமுடி போட்டு மூடி வைத்து வீட்டில் தூங்க வந்துள்ளார்

2031 இல் வேற்றுக்கிரகவாசிகளை சந்திக்கலாம்: ரஸ்ய விஞ்ஞானி



மனித குலமானது 2031 ஆம் ஆண்டளவில் வேற்றுக் கிரக வாசிகளை சந்திக்க முடியும் என ரஸ்ய விஞ்ஞானி ஒருவர் எதிர்வுகூறியுள்ளார்.இதனை எதிர்வு கூறியுள்ளவர் 'ரஸ்யன் எக்கடமி ஒப் சயன்ஸ் எப்ளையிட் அஸ்ட்ரோனோமி இன்ஸ்டிடூட்' இன் இயக்குனர் பின்கில்ஸ்டீன் ஆவார்.வேற்றுக் கிரக வாசிகள் தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளும் சர்வதேச மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். "உயிர்களின் தோற்றமானது அணுக்கள் உருவாகுவதை போல தவிர்க்க முடியாதது. வேற்றுக்கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றை நாம் 20 வருடங்களுக்குள் கண்டு பிடிப்போம்" என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன் போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் நட்சத்திர மண்டலத்தில் நாம் அறிந்த வகையில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் 10 % பூமியை ஒத்தவை. இவற்றில் நீரைக் கண்டுபிடிக்க முடிந்தால் ஏன் உயிர்களைக் கண்டு பிடிக்க முடியாதென கேள்வியும் எழுப்பியுள்ளார். வேற்றுக் கிரக வாசிகளும் உருவத்தில் மனிதர்களை ஒத்ததாக காணப்படலாம் எனவும், வேறு வகையான தோல் நிறத்தினை உடையவர்களாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

வான்வெளியில் தண்ணீரை பாய்ச்சும் விண்மீன்கள்; விஞ்ஞானிகள் தகவல்

நெதர்லாந்தில் உள்ள வெஸ்டன் பல்கலைகக்கழக விஞ்ஞானிகள் விண் வெளி யில் உள்ள சூரிய குடும்பம் குறித்து ஒரு ஆய்வு மேற் கொண்டனர். அப்போது சூரியனை சுற்றி அளவில் சிறியதாக உள்ள நட்சத்திர கூட்டம் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இவை பூமியில் இருந்து 750 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இவை கடந்த 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும் என கருதப்படுகிறது. இவை வாயுவினால் ஆன மேக மூட்டத்துக்குள் தூசி போன்று காணப்படுகின்றன.இந்த மேக மூட்டத்தை அதிநவீன தொழில் நுட்பத்து டன் கூடிய டெலஸ்கோப் மூலம் ஆய்வு செய்தனர். அப் போது அந்த நட்சத்திர கூட்டத்தை சுற்றிலும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சி ஜன் வாயுக்கள் படர்ந்து இருப் பதை கண்டறிந்தனர்.

இதில் ஆச்சரியம் என்ன வென்றால், பல ஆயிரம் டிகிரி வெப்ப நிலை மாற்றத்தின் மூலம் ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் ஒன்று சேர்ந்து அது தண்ணீராக மாறுகிறது. அந்த தண்ணீரை நட்சத்திர கூட்டத்தின் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களில் பீய்ச்சி அடிக்கப்படுகிறது.சுமார் 2 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் அந்த தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் துப்பாக்கி யில் இருந்து பாயும் குண்டின் வேகத்தை விட 80 மடங்கு அதிவேகத்தில் அவை பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இந்த தகவலை வெஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானி லார்ஸ் கிறிஸ்டென்சென் தெரிவித்துள்ளார்.

சிங்கத்துடன் ஐந்து வாரம் உக்ரைன் நாட்டை சேர்ந்த வாலிபர் சாகசம்

உக்ரைன் : அலெக்ஸாண்டர் பிலிஷென்கோ என்பவர் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர். இவர் மிருக காட்சி சாலை ஒன்றின் உரிமையாளர். அங்கு சில சிங்கங்களை பராமரித்து வருகிறார். இந்நிலையில், திடீரென சிங்கங்கள் வசிக்கும் கூண்டில் அவற்றுடன் ஐந்து வாரங்கள் தங்கியிருந்து சாதனை செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் சிங்கங்களில் ஒன்று பிரசவத்திற்கு தயார் நிலையில் உள்ளது. சிங்கக்குட்டிகள் பிரசவிக்கும் போது தாம் கூண்டிலிருக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இவர் கூண்டில் இருக்கப்போகும் நாட்களில் உணவு, உறக்கம் அனைத்துமே இந்த கூண்டுக்குள் தான் என்று கூறப்படுகிறது. இந்த கூண்டுக்குள் கேமிராக்களை பொருத்தி ஒரு தொலைக்காட்சியின் மூலம் ஒளிபரப்பவும் இவர் திட்டமிட்டுள்ளார்.

இலங்கையில் பிடிக்கப்பட்ட 10 தலை நாகம்


இலங்கை போக்கினைப் பகுதியில்  பிடிக்கப்பட்ட 10 தலை நாகம்.

மரபணு மாற்றத்தால் 'பாடும்' எலி : ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை (Video / Photo)


மரபணு மாற்றம் மூலம் பறவைகள் போன்று குரல் எழுப்பும் எலியை, ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர். இதன் மூலம் "மனிதனுக்கு பேச்சாற்றல் வந்த ரகசியம் குறித்து. அறிந்து கொள்ள முடியும்' என, அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பரிணாம வளர்ச்சிக்கு "மியூட்டேசன்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், மரபணுவில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் முக்கிய காரணியாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பரிணாம வளர்ச்சியின் ரகசியங்களை அறிந்து கொள்ளும் வகையில், ஜப்பானை சேர்ந்த ஒசாகா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் தீவிர ஆய்வில் களமிறங்கினர். எலிகளின் மரபணுக்களில் மாற்றம் செய்து ஆய்வு நடத்தினர். இதில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட எலிகளில் ஒன்று பறவைகள் போன்று குரல் எழுப்பியது தெரிந்தது. இதையடுத்து ஆய்வை, விஞ்ஞானிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து ஆய்வுக் குழுவை சேர்ந்த, விஞ்ஞானி அரிக்குனி உச்சிமுரா கூறியதாவது:"பரிணாம வளர்ச்சிக்கு திடீர் மாற்றங்களே முக்கிய காரணி என்பது ஏற்கனவே கண்டறியப்பட்ட வரலாற்று ஆய்வு உண்மை.
இதை அடிப்படையாக கொண்டு எலிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டத்திற்கு, "எலிகள் பரிணாம வளர்ச்சித் திட்டம்' என்று பெயரிடப்பட்டது. எலிகளின் மரபணுக்களில் (டி.என்.ஏ.,) சில மாற்றங்களை செய்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. அப்போது, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எலிகளில் ஒன்று, பறவைகள் போன்று குரல் எழுப்பியது. இது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட எலி, அதன் அடுத்த தலைமுறைக்கும் தொடர்ந்து பாடும் குணாதிசயத்தை மரபணு மூலம் கடத்தும் என்பதும் ஆய்வில் உறுதியாகியுள்ளது.
எனவே, அந்த எலியின் மரபணு தன்மையை அடிப்படையாக கொண்டு மேலும் 100 "பாடும்' எலிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்களுக்கு பேச்சாற்றல் வந்ததன் ரகசியத்தை அறிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, பறவைகளின் பாடும் குணாதிசயங்களையும் கூர்ந்து கவனித்து ஆய்வு நடக்கிறது. இவ்வாறு அரிக்குனி உச்சிமுரா கூறினார்.