Wednesday, 28 December 2011

சிங்கத்துடன் ஐந்து வாரம் உக்ரைன் நாட்டை சேர்ந்த வாலிபர் சாகசம்

உக்ரைன் : அலெக்ஸாண்டர் பிலிஷென்கோ என்பவர் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர். இவர் மிருக காட்சி சாலை ஒன்றின் உரிமையாளர். அங்கு சில சிங்கங்களை பராமரித்து வருகிறார். இந்நிலையில், திடீரென சிங்கங்கள் வசிக்கும் கூண்டில் அவற்றுடன் ஐந்து வாரங்கள் தங்கியிருந்து சாதனை செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் சிங்கங்களில் ஒன்று பிரசவத்திற்கு தயார் நிலையில் உள்ளது. சிங்கக்குட்டிகள் பிரசவிக்கும் போது தாம் கூண்டிலிருக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இவர் கூண்டில் இருக்கப்போகும் நாட்களில் உணவு, உறக்கம் அனைத்துமே இந்த கூண்டுக்குள் தான் என்று கூறப்படுகிறது. இந்த கூண்டுக்குள் கேமிராக்களை பொருத்தி ஒரு தொலைக்காட்சியின் மூலம் ஒளிபரப்பவும் இவர் திட்டமிட்டுள்ளார்.

No comments:

Post a Comment