Monday, 17 September 2012

நீரின் உதவியோடு இலத்திரனியல் சாதனங்களை இனி சார்ஜ் செய்ய முடியும் .

  கையடக்கத்தொலைபேசிகள், கெமராக்கள் போன்ற இலத்திரனியல் சாதனங்களை உபயோகிக்கும் போது நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக பெட்டரியின் சார்ஜ் சடுதியாகக் குறைவதைக் குறிப்பிடலாம்.
குறிப்பாக மின்சார வசதி இல்லாத ஓர் இடத்திற்கு செல்லும் போது பாவனையாளர்கள் எதிர்நோக்கும் சிரமம் சொல்லில் அடங்காது.
இத்தகைய சந்தர்ப்பங்களில் நமக்கு உதவக்கூடிய சாதனமொன்றினை சுவீடன் நாட்டு நிறுவனமொன்று உருவாக்கியுள்ளது.
இச்சாதனத்தின் மூலம் தண்ணீரைக் கொண்டு நமது கையடக்கத்தொலைபேசிகள், கெமராக்கள் ஜி.பி.எஸ். சாதனங்களை சார்ஜ் செய்துகொள்ள முடியும்.
இதற்கென உப்புநீர் அல்லது சிறுநீரைக்கூட உபயோகிக்கமுடியும்.
‘பவர் டிரக்’ என்ற இச்சாதனத்தில் ஒரு மேசைக்கரண்டி நீரை உபயோகிப்பதன் மூலம் சுமார் 10 மணித்தியாலங்கள் வரை உபயோகிக்கக்கூடியவாறு உங்கள் பெட்டரியை சார்ஜ் செய்துகொள்ளமுடியும்.
இதன் செயன்முறையானது சிறியதொரு இரசாயன மாற்றம் மூலமே நிகழ்கின்றது.
இச்சாதனத்தில் ‘சோடியம் சிலிசைட்’ என்ற விசேட மூலப்பொருளொன்று உபயோகப்படுத்தப்படுகின்றது.
‘சோடியம் சிலிசைட்’ நீருடன் சேரும் போது ஐதரசன் வாயு உருவாகின்றது.
இதன்மூலமே மின்சாரம் உருவாக்கப்பட்டு இச் செயற்பாடு நடைபெறுகின்றது.

புதிய சாதனை படைக்கவுள்ள விண்டோஸ் 7:

  உலகளவில் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை விட, விண்டோஸ் 7 இயங்குதளத்தை தான் பயன்படுத்துபவர்கள் தான் அதிகம் என்பது சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
விண்டோஸ் எக்ஸ்பி 42.8% பங்கினைக் கொண்டு மாதந்தோறும் 1% இழந்து வருகிறது.
விண்டோஸ் 7, 42.2% பங்கினைக் கொண்டு மாதந்தோறும் 1% உயர்ந்து வருகிறது.
விண்டோஸ் விஸ்டா, ஏறத்தாழ மொத்தமாகத் தன் பங்கினை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மிக உறுதியான இயங்குதளமாக விண்டோஸ் 7 வடிவமைக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நம்பிக்கையுடன் செயல்படும் தன்மை கொண்டது, பாதுகாப்பானது மற்றும் நாம் விரும்பி இயக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களுடன் இணைந்து இயங்குதல் போன்றவையும் காரணங்களாக தெரிவிக்கப்படுகிறது.
2020 ஆம் ஆண்டு வரை விண்டோஸ் 7 இயக்கத்திற்கு மைக்ரோசாப்ட் சப்போர்ட் தரும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

இன்று உலகில் பேசப்படும் மொழிகளில் பழமையான மொழி தமிழ்:


உலகின் மிக பழமையான மொழி தமிழ்மொழி என்று லண்டனில் இருந்து வெளியாகும் ,மிர்ரர் ,ஆங்கில பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 லண்டனிலிருந்து வெளியாகும் மிகபிரபலமான பத்திரிகை மிர்ரர் . இந்த பத்திரிகையில் கேள்வி நேரம் என்றொரு பகுதி வெளியாகிறது. இதில் உலகில் இப்போதும் பேசப்படும் மிகபழமையான மொழி எது என்று ஒரு வாசகர் கேட்டிருந்தார். அதற்கு இப்போதும் பேசப்படும் மொழிகளில் தமிழ்தான் மிக பழமையான மொழி என்று சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராச்சி மூலம் தெரியவந்துள்ளது .இதற்க்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன .
 சிந்துவெளிநாகரிகம்,மற்றும் சுமேரியா நாகரிககாலத்தில்கூட இந்திய துணைக்கண்டத்தின் தமிழ் மொழியின் பயன்பாடு இருந்திருக்கிறது.பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன ஆறுகள் குறித்த விபரங்ககள்
கூடபழங்கால தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன.
உண்மையிலேயே சமஸ்கிருதமட்டுமல்ல அனைத்து இந்திய மொழிகளுக்கும், ஐரோப்பிய மொழிகளுக்கும் தமிழ்தான் வேர், என்று கூறப்பட்டுள்ளது.

 

Monday, 9 July 2012

பேஸ்புக்கில் புகைப்படங்களை வீடியோவாக மாற்றம் செய்வதற்கு


   பேஸ்புக்கில் ஏராளமான புகைப்படங்கள் தினந்தோறும் பகிரப்படுகிறது. நீங்கள் சுற்றுலா செல்லும் போது எடுத்த புகைப்படங்கள், வாழ்த்து அட்டைகள், அழகான இயற்கை காட்சிகள் என ஒவ்வொருவரும் விதவிதமான புகைப்படங்களை உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறீர்கள்.
இவைகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து அட்டகாசமான பேக்ரவுண்ட் மியுசிக்குடன் கூடிய வீடியோவாக உருவாக்கலாம்.
இதற்கு முதலில் http://www.timelinemoviemaker.com/ தளத்திற்கு செல்லவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் Make your Movie என்ற பட்டனை அழுத்தவும்.
இந்த பட்டனை அழுத்தியவுடன் பேஸ்புக் permission கேட்கும் Allow கொடுக்கவும்.
பிறகு உங்களுடைய Timeline movie தயாராகும். உங்களுடைய கணக்கில் உள்ள புகைப்படங்களை ஒட்டுமொத்தமாக சேர்த்து வீடியோ தயாரிக்கும்.
உங்கள் கணக்கில் குறிப்பிட்ட அளவு புகைப்படங்கள் இல்லை என்றால் புகைப்படத்தை சேருங்கள் என்ற அறிவிப்பை வெளியிடும்.
முடிவில் உங்களுடைய வீடியோ தயாராகிவிடும். இந்த வீடியோவில் உள்ள பின்னணி இசையை உங்கள் விருப்பத்திற்கு மாற்றி கொள்ளலாம்.
இப்பொழுது உங்களுக்கு பிடித்த மாதிரி வீடியோவாக உருவாக்கியதும் Share என்ற பட்டனை அழுத்தி அந்த வீடியோவை உங்கள் கணக்கில் பகிருங்கள்

300 வருடங்களாக நிலவும் நியூட்டனின் கணிதப் புதிர் தீர்க்கப்பட்டது


16 வயதேயான ஜேர்மன் இல் வசிக்கும் இந்திய வம்சாவளி மாணவனான ஷௌர்ய்யா ராய்ஃப்,
300 வருடங்களுக்கு முன் கணித மாமேதையான சர் ஐசாக் நியூட்டனால் விடுவிக்கப் பட்ட கணிதப் புதிரை முதலாவது நபராகத் தீர்த்து சாதனை படைத்துள்ளார். இச்செய்தி இலண்டனிலிருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
வளித்தடை இருந்தபோது  நீள்வட்டப் பாதையில் புவியீர்ப்பை எதிர்த்து பயணம் செய்யும் பொருளின் பாதையை எவ்வாறு உறுதியாகக் கணிக்க முடியும் என்பது தொடர்பான கணிதப் புதிரையே இம் மாணவன் தீர்த்துள்ளான் எனக் கூறப்பட்டுள்ளது.
இவர் 6 வயதாக இருக்கும் போதே இவரது தந்தையாரும் பொறியியலாளருமான சுஃபாஷிஸ் இவருக்கு கணிதத்தின் மிகக் கடினமான பாகமான நுண்கணிதத்தைப் (Calculus) போதித்துள்ளார். மேலும் இவர் சிறுவனாக இருந்த போதிலிருந்தே கணிதத்தில் அபாரத் திறமை உடையவனாயிருந்துள்ளார்.
 
இவருக்கு 12 வயதாக இருக்கும் போது இவரின் குடும்பம் ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்தது. அங்கு உயர் கல்வி கற்கத் தொடங்கிய ராய்ஃப் தனது தந்தைக்கோ ஆசிரியர்களுக்கோ தெரிவிக்காமலேயே இப் புதிரைத் தீர்த்துள்ளார். இது மட்டுமன்றி 19 ஆம் நூற்றண்டில் எழுப்பப் பட்ட சுவர் ஒன்றின் மீது மோதும் பொருளின் வெடிப்பு பற்றிய இன்னுமொரு புதிரையும் இவர் தீர்த்துள்ளார்.
டைனமிக்ஸ் எனும் இயக்கவியற் துறையில் மைல்கல்லாக விளங்கும் இப்புதிர்களை விடுவித்ததன் மூலம் ஏவுகணைகள் தயாரிப்பில் முன்னேற்றகரமான அடுத்த கட்டங்களை நோக்கி செல்வதற்கு இவர் வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது