Monday 17 September 2012

நீரின் உதவியோடு இலத்திரனியல் சாதனங்களை இனி சார்ஜ் செய்ய முடியும் .

  கையடக்கத்தொலைபேசிகள், கெமராக்கள் போன்ற இலத்திரனியல் சாதனங்களை உபயோகிக்கும் போது நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக பெட்டரியின் சார்ஜ் சடுதியாகக் குறைவதைக் குறிப்பிடலாம்.
குறிப்பாக மின்சார வசதி இல்லாத ஓர் இடத்திற்கு செல்லும் போது பாவனையாளர்கள் எதிர்நோக்கும் சிரமம் சொல்லில் அடங்காது.
இத்தகைய சந்தர்ப்பங்களில் நமக்கு உதவக்கூடிய சாதனமொன்றினை சுவீடன் நாட்டு நிறுவனமொன்று உருவாக்கியுள்ளது.
இச்சாதனத்தின் மூலம் தண்ணீரைக் கொண்டு நமது கையடக்கத்தொலைபேசிகள், கெமராக்கள் ஜி.பி.எஸ். சாதனங்களை சார்ஜ் செய்துகொள்ள முடியும்.
இதற்கென உப்புநீர் அல்லது சிறுநீரைக்கூட உபயோகிக்கமுடியும்.
‘பவர் டிரக்’ என்ற இச்சாதனத்தில் ஒரு மேசைக்கரண்டி நீரை உபயோகிப்பதன் மூலம் சுமார் 10 மணித்தியாலங்கள் வரை உபயோகிக்கக்கூடியவாறு உங்கள் பெட்டரியை சார்ஜ் செய்துகொள்ளமுடியும்.
இதன் செயன்முறையானது சிறியதொரு இரசாயன மாற்றம் மூலமே நிகழ்கின்றது.
இச்சாதனத்தில் ‘சோடியம் சிலிசைட்’ என்ற விசேட மூலப்பொருளொன்று உபயோகப்படுத்தப்படுகின்றது.
‘சோடியம் சிலிசைட்’ நீருடன் சேரும் போது ஐதரசன் வாயு உருவாகின்றது.
இதன்மூலமே மின்சாரம் உருவாக்கப்பட்டு இச் செயற்பாடு நடைபெறுகின்றது.

No comments:

Post a Comment