Monday 9 July 2012

300 வருடங்களாக நிலவும் நியூட்டனின் கணிதப் புதிர் தீர்க்கப்பட்டது


16 வயதேயான ஜேர்மன் இல் வசிக்கும் இந்திய வம்சாவளி மாணவனான ஷௌர்ய்யா ராய்ஃப்,
300 வருடங்களுக்கு முன் கணித மாமேதையான சர் ஐசாக் நியூட்டனால் விடுவிக்கப் பட்ட கணிதப் புதிரை முதலாவது நபராகத் தீர்த்து சாதனை படைத்துள்ளார். இச்செய்தி இலண்டனிலிருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
வளித்தடை இருந்தபோது  நீள்வட்டப் பாதையில் புவியீர்ப்பை எதிர்த்து பயணம் செய்யும் பொருளின் பாதையை எவ்வாறு உறுதியாகக் கணிக்க முடியும் என்பது தொடர்பான கணிதப் புதிரையே இம் மாணவன் தீர்த்துள்ளான் எனக் கூறப்பட்டுள்ளது.
இவர் 6 வயதாக இருக்கும் போதே இவரது தந்தையாரும் பொறியியலாளருமான சுஃபாஷிஸ் இவருக்கு கணிதத்தின் மிகக் கடினமான பாகமான நுண்கணிதத்தைப் (Calculus) போதித்துள்ளார். மேலும் இவர் சிறுவனாக இருந்த போதிலிருந்தே கணிதத்தில் அபாரத் திறமை உடையவனாயிருந்துள்ளார்.
 
இவருக்கு 12 வயதாக இருக்கும் போது இவரின் குடும்பம் ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்தது. அங்கு உயர் கல்வி கற்கத் தொடங்கிய ராய்ஃப் தனது தந்தைக்கோ ஆசிரியர்களுக்கோ தெரிவிக்காமலேயே இப் புதிரைத் தீர்த்துள்ளார். இது மட்டுமன்றி 19 ஆம் நூற்றண்டில் எழுப்பப் பட்ட சுவர் ஒன்றின் மீது மோதும் பொருளின் வெடிப்பு பற்றிய இன்னுமொரு புதிரையும் இவர் தீர்த்துள்ளார்.
டைனமிக்ஸ் எனும் இயக்கவியற் துறையில் மைல்கல்லாக விளங்கும் இப்புதிர்களை விடுவித்ததன் மூலம் ஏவுகணைகள் தயாரிப்பில் முன்னேற்றகரமான அடுத்த கட்டங்களை நோக்கி செல்வதற்கு இவர் வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment