Wednesday, 21 March 2012

அழகென்றால் ஆபத்தும் இருக்கும் என்பது உண்மை தானோ?


பார்ப்பதற்கு அழகான இவ்வகைப் பாம்பு மலேசியாவுக்கு உரித்தான நீலப் பவளப் பாம்பு அல்லது நீல மலேசிய பவளப் பாம்பாகும்.
சுமார் 5 அடி நீளம் கொண்ட இது கொடிய விஷமுடையது. இப் பாம்பு தீண்டினால் மரணம் நிச்சயம்.
இதன் உடல் முழுவதும் நீல நிறத்திலான வரியும் தலையிலும் வாலிலும் பிரகாசமான சிவப்பு நிறமும் காணப்படும்.
மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளிலும் இவ்வகைப் பாம்புகள் உள்ளன.
இது பல்லி, தவளை, பறவைகள் என்பவற்றோடு பிரதான உணவாக மற்றைய பாம்புகளை உட்கொள்கிறது.
இந்நீலப் பவளப் பாம்பு விதிவிலக்காக நீண்ட விஷச் சுரப்பியைக் கொண்டுள்ளது.
இவ்வகைப் பாம்பு தீண்டினால் ஆரம்பத்தில் அறிகுறிகள் எதுவும் தெரியாது. பல நிமிடங்களுக்குப் பின் உணர்வின்மை ஏற்படுவதோடு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். சுவாசச் செயலிழப்பு காரணமாகவும் மரணம் சம்பவிக்கலாம்

No comments:

Post a Comment