Wednesday 28 December 2011

2 சூரியன்கள் உதிக்கும் கிரகம்: 

அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு:


Sun risingஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் “ஹெப்லர்” என்ற பெயர் கொண்ட விண்கலம் ஒன்றை விண்ணுக்கு அனுப்பினார்கள்.
 
இந்த விண்கலம் 2 சூரியன்கள் உள்ள கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த கிரகம் பூமியில் இருந்து 200 ஒளி வருடங்களுக்கு அப்பால் உள்ளது. ஒளி வருடம் என்பது ஒளி ஒரு வருடத்தில் கடக்கும் தூரம் ஆகும். அதாவது 9 1/2 லட்சம் கோடி கி.மீட்டர் ஆகும்.  
 
2 சூரியன்களை சுற்றி வர இந்த கிரகம் 229 நாட்களை எடுத்துக் கொள்கிறது. 2 சூரியன்கள் இருந்தாலும் இவை ஒரே திசையில் இருப்பதால் பூமியைப் போலவே இந்த கிரகத்திலும் பகல்-இரவு இருந்து வருகிறது. இதனால் ஒரு நாளைக்கு இரண்டு சூரிய உதயங்களும், இரண்டு சூரிய அஸ்தமனங்களும் நிகழ்கின்றன.
 
மேலும் இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இரண்டு சூரியன்களும் ஒன்றையொன்று சுற்றி வருகின்றன. இதனால் 20 நாட்களுக்கு ஒருமுறை கிரகணம் ஏற்படுகிறது. சூரியன்கள் இரண்டும் நமது பூமியில் காணப்படும் சூரியனை விடச் சிறியவை. ஒன்று ஆரஞ்சு நிறத்திலும், மற்றொன்று சிவப்பு நிறத்திலும் தோன்றி மறைகின்றன.
 
ஒன்று நாம் காணும் சூரியனைவிட முக்கால் பங்கிற்கும் குறைவான அளவை உடையது. மற்றொன்று கால் பங்கிற்கும் குறைவானது.
 
இந்த பிரபஞ்சத்தில் பல வகை சூரியன்களும் (நட்சத்திரங்கள்), கிரகங்களும் உள்ளன என்பதையே இது காட்டுகிறது. ஹெப்லர் விண்கலம் கண்டுபிடித்ததால் இந்த கிரகத்துக்கு “ஹெப்லர் 16பி” என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் கலிபோர்னியா கார்ல்சேகன் விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

2 comments:

  1. I feel strongly learning the topic, however I need to learn more on this topic.
    Carry on your updates..!!
    Hyundai Elantra AC Compressor

    ReplyDelete
  2. I feel strongly learning the topic, however I need to learn more on this topic.
    Carry on your updates..!!
    Hyundai Elantra AC Compressor

    ReplyDelete