Friday, 17 February 2012

மின்னஞ்சல்


அடுத்தவர் மின்னஞ்சல் முகவரி பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பலாம்!!




கள்ள வழிமுறைகள் கற்று மறக்கவேண்டிய பாடம்தான். இப்பதிவு இப்படியும் உங்கள்  மின்னஞ்சல் முகவரிகளை என்று உணர்த்தவே.
தயவுசெய்து நீங்கள் இதனை தவறான வழிக்கு பயன்படுத்தாதீர்கள் குற்றம் செய்ப்வர்கள் நெடு நாட்கள் தப்பிக்க முடியாது.


உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சில தளங்களில் நுழைவதற்கு பயன்படுத்துவீர்கள் அங்கு தான் உங்கள் மின்னஞ்சல் மற்றவர்களுடைய கைகளுக்கு போகிறது அதாவது நீங்கள் மின்னஞ்சல் கொடுத்து நுழைகிற தளங்களில் இருந்து அவர்களே உங்கள் முகவரிகளை விற்க கூடும் இல்லையென்றால் இனையத்தில் பதிந்திருக்கும் மின்னஞ்சல் முகவரிகளை படிப்பதற்கென்றே(விபரம் தெரிந்தவர்கள் அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை கொடுக்கும் போது @ என்படை (at) எனவும் . என்பதை (dot) எனவும் எழுதுவதை பார்த்திருப்பீர்கள் ஆனாலும் இது தீர்வல்ல) சில ரோபட்கள் இயங்கும் இவை உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை படித்து தயாரித்த நபர்களுக்கு அனுப்பிவிடும் அதை அவர்கள் முறைகேடாக பலான தளங்கள் இன்ன பிற தளங்கள் தங்கள் விளம்பரத்துக்காக வாங்கி கொண்டு அதன் வழியாக அவர்கள் தள விளம்பரத்தை அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள்.

இது போலவே நாமும் நமக்கு தெரிந்த ஒருவரின் மின்னஞ்சல் முகவரியை வைத்து வேறு யாருக்காவது மின்னஞ்சல் அனுப்ப முடியுமா எனக் கேட்டால் அனுப்ப முடியும் என்பதே பதில் இதற்கெனவே சில தளங்கள் இயங்குகின்றன.சிலவற்றை இங்கு தருகிறேன்.
sendanonymoussms





இன்னும் வேறு நிறைய தளங்கள் இருக்கின்றன இந்த ஐந்தில் நான்கு தளங்கள் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது கூடவே அவர்கள் தளத்தின் நோட்டையும் சேர்த்து விடுவார்கள் ஆனால் ஒரு தளம் மட்டும் அவர்களின் விளம்பரத்தையும் இனைப்பதில்லை இந்த தளத்தில் இருந்து மின்னஞ்சல் அனுப்பினால் நிச்சியம் நம்பி விடுவார்கள் ஆனால் எப்படி உண்மையான ஒரு மின்னஞ்சலுக்கும் ஒரு டூப்ளிகேட் மின்னஞ்சலுக்கும் உள்ள வித்யாசத்தை கண்டுபிடிப்பது என்பதை பற்றி கீழே படத்துடன் பார்க்கலாம்.
இனி நீங்கள் இங்கு சென்று ஏதாவது ஒரு மின்னஞ்சல் அனுப்பி பாருங்கள்.
பாவனையாளர் ஒருவர் மின்னஞ்சலில் இருந்து மற்றொரு மின்னஞ்சல் முகவரிக்கு கூகுளின் ஜிமெயில் வழியாக அனுப்பியது.
இனி உங்கள் ஜிமெயிலில் இருந்து மின்னஞ்சல் அனுப்பினால் கீழிருக்கும்  படத்தில் உள்ளது போல Show Details என்பதை கிளிக்கி பாருங்கள் Mailed by signed by என்பதில் gmail.com என்பதாக இருக்கும்.
இனி நாம் அடுத்தவரின் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி நாம் வேறொருவருக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அதுவும் இப்படித்தான் இருக்கும் மேலிருக்கும் மின்னஞ்சலுக்கும் கீழிருக்கும் மின்னஞ்சலுக்கும் ஏதாவது வித்யாசம் இருக்கிறதாவென பாருங்கள்.
இனி நாம் மற்றவரின் மின்னஞ்சலின் முகவரியை பயன்படுத்தி நாம் வேறு நபர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அவர்கள் Show Details என்பதை திறந்து பார்க்காதவரை சம்பந்தபட்ட நபர் தான் அனுப்பியிருப்பார் என நினைக்க கூடும், அதன் பின் Show Details திறந்து பாருங்கள் ஜிமெயிலில் இருந்து நேரடியாக அனுப்பிய மின்னஞ்சலுக்கும் நாம் மற்றவர்களின் மின்னஞ்சலை பயன்படுத்தி அனுப்பியதற்கும் வித்யாசம் புரியும்.
இனிமேல் உங்கள் நண்பரின் பெயரில் ஏதாவது தவறான மின்னஞ்சல் வந்தால் கொஞ்சம் பொறுமையாக பாருங்கள் விபரம் புரியும் அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரியில் இருந்து வேறு நண்பர்களுக்கு தவறான மின்னஞ்சல் போகிறது என்றாலும் உடனே பதட்டபடாதீர்கள் உங்கள் வலைத்தளமோ அல்லது மின்னஞ்சலோ மற்றவர்களால் ஹேக் செய்யப்பட்டால் முதல் வேளையாக அவர்கள் செய்வது உங்கள் பாஸ்வேர்ட் செட்டிங்ஸ் மாற்றி விடுவார்கள் ரீட்டிரைவ் மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண் எல்லாவற்றையும் மாற்றுவதுடன் உங்கள் முழுத்தளத்தையும் அழித்து விடுவார்கள் உங்கள் சொந்த தகவல் எல்லாம் திருடப்படும் இவை எதுவும் நடக்காமல் இருந்தால் நிச்சியும் உங்களுக்கு தெரிந்த யாரோ ஒருவர் அல்லது மேலே சொன்ன சில வியாபார தளங்களும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி விளையாடுகிறார்கள் என புரிந்து கொள்ளுங்கள் உடனடியாக இதற்கெல்லாம் பாஸ்வேர்ட் மாற்றுவதில் பெரிதாக பயன் இல்லை.

இதப்படிச்சுட்டு யாராவது களவாணிப்பயலுக களத்தில இறங்கினீங்களோ கம்பி எண்ணவேண்டியதுதான். ஓகே!




சேவல் முட்டை



சீனாவில் சேவல் முட்டையிட்டதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி


சீனாவிலுள்ள சேவலொன்று முட்டையிடுவது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்வதற்கு தற்போது ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.
சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள சுமியோ கிராமத்தில் வசிக்கும் ஹுவாங் லீ(47) என்பவர் வளர்த்து வந்த சேவலே இவ்வாறு முட்டையிடத் தொடங்கியுள்ளது.


இவர் தனது கோழிப் பண்ணையில் 7 கோழிகளையும், ஒரு சேவலையும் வளர்த்து வந்துள்ளார். குளிர்காலத்தின் போது கோழிகள் அனைத்தையும் இவரின் குடும்பத்தினர் சமைத்து உண்டு விட இந்த சேவல் மட்டும் எஞ்சியுள்ளது. இச்சேவல் தற்போது முட்டையிடுகிறது.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், மாரி காலத்தில் கோழிகள் அனைத்தையும் சமைத்து விட சேவல் மட்டுமே எஞ்சியிருந்தது. ஒருநாள் கோழிக்கூட்டைச் சென்று பார்க்கையில் அங்கு சேவலுக்கருகில் முட்டை இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
மற்றவர்கள் யாரும் வேடிக்கைகாக முட்டையை கொண்டு வந்து சேவலுக்கு அருகில் வைத்திருக்கலாமென நான் நினைத்தேன். ஆனால் அடுத்தநாள் இன்னுமொரு முட்டையும் இருந்தது. அதனால் நான் மூன்றாவது நாள் கோழிக்கூடு அருகில் காத்திருந்தேன். ஆச்சர்யப்படும் வகையில் அச்சேவல் முட்டையிட்டது எனக் கூறியுள்ளார்.
இத்தகவல் தொலைக்காட்சிகள் மூலம் எல்லா இடங்களுக்கும் பரவியதையடுத்து உள்நாட்டு விவசாயத்துறை அமைச்சகத்தின் விஞ்ஞானிகள் எனது சேவலை பரிசோதனைக்காக வாங்கிச் சென்றுள்ளனர்.
அது சேவலைப் போன்று தோற்றமளிக்கும் கோழியா அல்லது அனைத்து கோழிகளும் இறந்தபின் அச்சேவல் கோழியாக மாறிவிட்டதா என விஞ்ஞானிகள் ஆராய விரும்புகிறார்கள் என ஹவாங் லீ கூறியுள்ளார்.
என்னைப் பொறுத்தவரை அது ஏனைய சேவல்களைப் போன்றே காலையில் எழுந்து கூவும். ஏனயை கோழிகளுடன் அது சேவல் போன்றே நடந்துகொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Thursday, 16 February 2012

Websites

KeetruWebsites

அரசியல் - சமூகம்
சவுக்கு - www.savukku.net
தென்செய்தி - www.thenseide.com
பெரியார் - www.periyarevr.org
உண்மை - www.unmaionline.com
திராவிடர் - www.dravidar.org
தமிழ் அரங்கம் - www.tamilcircle.net
தி.க. பெரியார் - www.periyar.org
http://www.stoptheslaughteroftamils.org/
இனியொரு - www.inioru.com
ஆதித்தமிழர் பேரவை - www.aathithamizharperavai.com













பொது
தமிழகம் - www.thamizhagam.net
நிலாச்சாரல் - www.nilacharal.com
ரத்த வங்கி - www.bharatbloodbank.com
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - www.pattukkottaiyar.com

இலக்கியம்
நூலகம் - www.noolaham.org
பதிவுகள் - www.pathivugal.com
தமிழம் - www.thamizham.net
முத்தமிழ் மன்றம் - www.muthamilmantram.com
அப்பால் தமிழ் - www.appaal-tamil.com
விருபா - www.viruba.com

வலைப்பூக்கள்
பனித்துளி சங்கர் - http://wwwrasigancom.blogspot.com
வினவு - http://vinavu.com
கோணங்கள் திரைப்பட சங்கம் - http://konangaltamil.blogspot.com/
தமிழ்நதி - www.tamilnathy.blogspot.com
தமிழ்சசி - www.blog.tamilsasi.com
சந்திப்பு - www.santhipu.blogspot.com
ஆதிரை - www.athirai.blogspot.com
பீர்முஹம்மது - www.mohammedpeer.blogspot.com
திராவிட தமிழர்கள் - www.dravidatamils.blogspot.com
பாமரன் - www.pamaran.wordpress.com
மக்கள் சட்டம் - www.makkal-sattam.blogspot.com
அசாக் - www.asakmanju.blogspot.com
தமிழ்மணம் - www.tamilmanam.net





























வாசகர்களின் கவனத்திற்கு...


நீங்கள் படித்து, பயன் பெற்ற இணைய தளங்களை இந்தப் பகுதி மூலம் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ய விரும்பினால், தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.