Thursday, 16 February 2012

உலகம் எப்படி அழியும்

உலகம் எப்படி அழியும்? அதிர வைக்கும் அறிவியல் உண்மை




உலகம் இறுதியில் எப்படி அழியும்?. இந்தக் கேள்விக்கு பலரும் கூறும் பொதுவான பதில் இயற்கைப் பிரளயத்தில் சிக்கி அழியும், தீயில் அழியும் என்பதுதான். ஆனால் சால் பெர்ல்மட்டர், பிரையன் ஸ்மிட் மற்றும் ஆடம் ரீஸ் ஆகியோர் கூறும் பதில் உலகம் அப்படியே பனிப் பிரதேசமாக உறைந்து போய் விடும் என்பது. இதற்காகத்தான் அவர்களுக்கு 2011ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு கிடைத்துள்ளது.

இந்த மூன்று அமெரிக்க வி்ஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏன் இந்த மூவருக்குமே கூட தங்களது கண்டுபிடிப்பு பெரும் வியப்பையே அளித்ததாம். அவர்களால் கூட இதை நம்ப முடியவில்லையாம். சூப்பர் நோவா எனப்படும் வெடிக்கும் நட்சத்திரக் கூட்டங்களை தொடர்ச்சியாக ஆராய்ந்து அதன் அடிப்படையில்தான் உலகம் கடைசியில் உறைந்து போய் விடும் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லியுள்ளனர் இந்த மூவரும்.


14 பில்லியின் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பிங் பாங் எனப்படும் மிகப் பெரிய அண்டவெடிப்பு அனைவருக்கும் தெரிந்ததுதான். பிங் பாங்குக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப் பெரிய வெப்பம் படிப்படியாக குளிர்ந்து நட்சத்திரக் கூட்டம், கிரகஙக்ள் உள்ளிட்டவை உருவாகின. பிரபஞ்சமும் தொடர்ந்து விரிவடைந்து வந்தது. அந்த செயல் இன்றும் நிற்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த வேகம் அதிகரித்தால் இறுதியில் உலகம் முழுவதும் பனிப் பிரதேசமாகி உறைந்து போய் விடும் என்பதுதான் இந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும்.இந்த மூவருமே தனித் தனி அணியாக செயல்பட்டு ஆய்வில் ஈடுபட்டிருந்தவர்கள். ஒரு குழுவுக்கு சால் பெர்ல்மட்டர் தலைமை தாங்கினார். இன்னொரு குழுவுக்கு பிரையன் ஸ்மிட் தலைவராக இருந்தார். பெர்ல்மட்டர் தலைமையிலான குழு தனது ஆய்வை 1998ல் தொடங்கியது. பிரையன் தலைமையிலான குழு தனது ஆய்வை 1994ல் தொடங்கியது. இந்தக் குழுவில் முக்கியப் பங்காற்றியவர் ஆடம் ரீஸ்.

தொலைதூர சூப்பர் நோவாவை இவர்கள் கண்டறிந்து அதை ஆய்வு செய்ய ஆரம்பித்தனர். பூமி மற்றும் விண்வெளியிலிருந்து அதி நவீன தொலை நோக்கிகள் மூலம் இந்த ஆய்வு நடந்தது. இதற்காக அதிக சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர்களும் பயன்படுத்தப்பட்டன. இவர்களது ஆய்வுக்குப் பெரும் வரப்பிரசாதமாக வந்தது டிஜிட்டல் இமேஜிங் சென்சார் கருவி. இதைக் கண்டுபிடித்தவருக்கு 2009ம் ஆண்டுக்கான நோபல் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.12க்கும் மேற்பட்ட சூப்பர் நோவாக்களை இவர்கள் ஆய்வு செய்தபோதும் லா சூப்பர்நோவா என்ற ஒன்றை மட்டும் குறிப்பாக தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்த சூப்பர் நோவா, பூமியை விட சிறியது, சூரியனின் எடையை விட அதிகமானது. இந்த ஒரு சூப்பர்நோவா மட்டும் ஒரு முழுமையான கேலக்ஸி வெளிப்படுத்தும் வெளிச்சத்தை விட பல மடங்கு அதிக வெளிச்சத்தை வெளிப்படுத்துவதை இந்த வி்ஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்தது.

இதேபோல மொத்தம் 50 சூப்பர் நோவாக்கள் வரை இவர்கள் கண்டுபிடித்து ஆய்வு மேற்கொண்டனர். ஒரு சூப்பர் நோவாவுக்கே இந்த அளவு வெளிச்சம் வரும்போது 50 சூப்பர் நோவாக்களும் சேர்ந்து எவ்வளவு வெளிச்சம் தர வேண்டும்?. ஆனால் அப்படி தரவில்லை. வி்ஞ்ஞானிகள் குழு எதிர்பார்த்த அளவிலான வெளிச்சத்தை அவர்களால் காண முடியவில்லை. இதன் மூலம் பிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து வருவதை அவர்கள் கண்டுபிடித்தனர். பிரபஞ்சத்தின் 5 சதவீத பகுதியில்தான் கிரகங்கள், நட்சத்திரங்கள், பூமி உள்ளிட்டவை உள்ளன. மீதமுள்ள 95 சதவீத பகுதி டார்க் எனர்ஜி எனப்படும் அறியப்படாத சக்தி அடங்கியவை. எனவே தற்போது இந்த மூன்று அமெரிக்க விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துக் கூறியுள்ள தகவல்கள், பிரபஞ்சம் குறித்த ஆய்வுகளுக்கு பெரும் திருப்புமுனையாக அமையும் எனக் கருதப்படுகிறது. மேலும் நம் முன் விரிந்து கிடக்கும், நம்மால் இன்னும் அறியப்படாத பல புதிர்களுக்கு விடை காண இந்த ஆய்வுகள் முதல் படியாக அமையும் எனக் கருதப்படுகிறது.அறிவியலில் எதுவும் சாத்தியமே என்பதை இந்த மூவர் குழு மீண்டும் நிரூபித்துள்ளது.


Monday, 9 January 2012

இடிந்து போகுமா காதல் ஓவியம்


இடிந்து போகுமா காதல் ஓவியம் ?

யமுனை ஆற்றின் மாசுபாடு காரணமாக தாஜ்மகாலின் அடிக்கட்டுமானத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடருமானால்- இன்னும் 5 ஆண்டுகளில் தாஜ்மகால் இடியும் நிலை ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காதல் மனைவி மும்தாஜூக்காக யமுனை நதிக்கரையில் 358 ஆண்டுகளுக்கு முன் ஷாஜகான் கட்டிய காதல் ஓவியம் தாஜ்மகால். முற்றிலும் பளிங்கு கற்களால் பளீரென கட்டப்பட்ட இந்த மாளிகை மெல்ல மெல்ல தன் பொலிவை இழந்து வருகிறது.
ஆக்ரா நகரின் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் மாசுக்கள்- காடுகள் அழிப்பு மற்றும் யமுனை நதி மாசுபாடு காரணமாக தாஜ் மகால் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.
யமுனை நதி மாசு காரணமாக- தாஜ் மகாலின் அடிக்கட்டுமானத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அரிப்பு தாஜ்மகால் முழுமையையும் சிதைக்க தயாராகி வருகிறது.
இந்நிலையில்- தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த ஆக்ரா எம்.பி. ராம்சங்கர் கதேரியா- தாஜ்மகாலை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னும் 5 ஆண்டுகளில் அது முற்றிலும் இடிந்து விடும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தாஜ்மகாலின் அடித்தளம் கடினமான மரத்தால் ஆனது. யமுனையின் மாசு காரணமாக அதில் அரிப்பு ஏற்பட்டுள்ளதால்- அரசு அதை பார்க்க அனுமதிப்பது இல்லை என்று தெரிவித்தார்.

டைனோசர் செல்லப்பிராணியா

பண்டைய மனிதர்கள் டைனோசரை செல்லப்பிராணியாக வளர்த்தார்களாம்??

டைனோசரும் மனிதர்களும் ஒரு காலத்தில் நண்பர்களாய் வாழ்ந்துள்ளனர் என்றால் நம்ப முடியுமா?  ஆனால் அது உண்மையிலும் உண்மை என்பதை சீன மற்றும் அமெரிக்க கூட்டு விஞ்ஞானிகன் கண்டுபிடித்துள்ளனர்.
தென் மேற்கு சீனாவில் இதற்கான சான்றுகள் உள்ளதை கூட்டு விஞ்ஞானிகன் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சாங்கிங் நகருக்கு அருகே உள்ள கிஜியாங்கிலுள்ள லியான்ஹுவா போசாய் பகுதியில் ஜிங்லிடா தலைமையில் சீனா  அமெரிக்கா விஞ்ஞானிகள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
சீனாவின் லியான்ஹுவா போசாய் பகுதியில் மக்கள் சுமார் 700 ஆண்டு காலம் வாழ்ந்துள்ளனர். நாய் வளர்ப்பது போல டைனோசர்களை செல்ல பிராணிகளாக இப்பகுதியினர் வளர்த்திருக்கின்றனர்.
தாமரை இலைக்கோட்டை என்று பொருள் படும் வகையில் லியான்ஹுவா போசாய் என்று பெயரிட்டிருக்கிறார்கள். இப்பகுதியில் பல இடங்களில் 350 முதல் 400 டைனோசர் காலடி தடங்கள் தெளிவாக உள்ளன. கோட்டை போன்ற வீட்டை கட்டி அங்கு டைனோசர்களுடன் மக்கள் தங்கியிருந்திருக்கின்றனர்.
இது தவிர மேலும் பல ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இங்கு கிடைத்த ஏராளமான டைனோசர் மற்றும் மனித தடயங்கள் மூலம் அரிய தகவல்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இவ்வாறு ஜிங்லிடா கூறியுள்ளார்.அப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது. இதில் மேலும் பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைக்கும் என்று தெரிகிறது.

செயற்கை ரத்தம்

செயற்கை ரத்தம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை !

லண்டன்: 
இங்கிலாந்தின் எடின்பர்க் & பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து செயற்கை ரத்தம் உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இவர்கள் ஸ்டெம்செல்களில் இருந்து சிவப்பு அணுக்களை உருவாக்கி அதன் மூலம். செயற்கை ரத்தத்தை தயாரித்தனர். இந்த ரத்ததில் 25 லட்சம் சிவப்பு அணுக்கள் இருக்கும் இவற்றை மனித உடலில் செலுத்த முடியும். எந்தவிதமான நோய் தொற்றும் ஏற்படாது. இன்னும் சில ஆண்டுகளில் இது பயன்பாட்டுக்கு வரும்.

பூமி அளவில் 2 புதிய கிரகங்கள்!


சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமி அளவில் 2 புதிய கிரகங்கள்!

நியூயார்க் : சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமி அளவில் 2 புதிய கிரகங்கள் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ‘நாசா’ நேற்று அறிவித்தது. இதுகுறித்து ‘நாசா’ வெளியிட்ட அறிக்கை வருமாறு: விண்வெளியில் உயிரினங்கள் வசிக்க சாத்தியமுள்ள புதிய கிரகங்கள் குறித்து, கெப்ளர் என்ற வரிசையில் பெயரிட்டு, நாசா ஆராய்ந்து வருகிறது. அதில் புதிதாக 2 கிரகங்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமி உட்பட 9 கிரகங்கள் சுற்றி வரும் சூரிய மண்டலத்துக்கு வெளியே இந்த புதிய கிரகங்கள் இருக்கின்றன. சூரியனை போன்ற பெரிய நட்சத்திரத்தை இவை சுற்றி வருகின்றன. இரண்டு கிரகங்களும் பூமியின் அளவில் இருக்கின்றன.
அவற்றுக்கு கெப்ளர்&20இ, கெப்ளர்&20எப் என்று பெயரிடப்பட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் இடையே உள்ள இடைவெளியைப் போல இல்லாமல், புதிய கிரகங்கள், பெரிய நட்சத்திரத்தின் மிக அருகே இருக்கின்றன. அங்கு திரவ நிலையில் தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது. பூமியைப் போன்ற புதிய கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கிய மைல்கல். கெப்ளர் &20இ, கெப்ளர் &20எப் ஆகியவை முழுவதும் பாறைகளால் ஆனதாக இருக்கலாம்.

முதல் கிரகம் பூமியின் அளவிலும், கெப்ளர் &20எப் பூமியை விட சிறிது பெரிதாகவும் உள்ளன. நட்சத்திரத்தை கெப்ளர் &20இ கிரகம் 6.1 ஒரு நாளில் சுற்றி வருகிறது. கெப்ளர் &20எப், 19.6 நாட்களில் சுற்றி வருகிறது. இவ்வளவு குறைந்த காலத்தில் அதிக வெப்பம் கொண்ட நட்சத்திரத்தின் அருகில் இருந்து சுற்றுவதால் அதிக வெப்பநிலை காரணமாக இந்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமாகாது.

கெப்ளர் &20இ கிரகத்தின் வெப்பநிலை 1,400 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருக்கும். கெப்ளர் &20எப் வெப்பநிலை 800 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும்.
இவை வசிக்க தகுதியற்றதாக இருந்தாலும், பூமியை போல உயிர்கள் வசிக்க சாத்தியமுள்ள கிரகங்களை ஆராயும் கெப்ளர் திட்டத்தில் பூமி அளவில் 2 கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது முதல்முறை. இவ்வாறு நாசா அறிக்கை தெரிவிக்கிறது.

பூமியைப் போன்ற கிரகம் கண்டுபிடிப்பு

பூமியைப் போன்ற கிரகம் கண்டுபிடிப்பு: நாசா தெரிவிப்பு.

 

உயிரினங்கள் வாழக்கூடிய வலயத்திலுள்ள, பூமி போன்ற கிரகமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா இன்று தெரிவித்துள்ளது.

கெப்ளர் விண்வெளித் தொலைக்காட்டி மூலம் கண்டுபிடிக்கப்பிடிக்கப்பட்ட இந்த கிரகத்திற்கு கெப்ளர் 22-பி (Kepler 22-b) என பெயரிடப்பட்டுள்ளது.

எமது சூரியனைப் போல் அல்லாத நட்சத்திரமொன்றை கெப்ளர் 22-பி கிரகம் சுற்றி வருகிறது. ஒரு தடவை அதன் சொந்தச் சூரியனை சுற்றுவதற்கு 290 நாட்கள் செல்கிறது.
நட்சத்திரங்களின் அளவு, வெப்பநிலை முதலான விடயங்களை கருத்திற்கொண்டு அந்த நட்சத்திரத்திலிருந்து எவ்வளவு தூர எல்லையில் உயிரினங்கள் இருக்கக்கூடிய கிரகங்கள் காணப்படலாம் என்பது தீர்மானிக்கப்படுகிறது. இத்தகைய பிரதேசமானது உயிரினங்கள் ‘வசிக்கத்தக்க வலயம்’  (habitable zone) என அழைக்கப்படுகிறது.
இதன்படி  எமது சூரிய தொகுதிக்கு அப்பால் ‘வசிக்கத்தக்க வலயத்திற்குள்’ கண்டுபிடிக்கப்பட்ட முதல் கிரகம் கெப்ளர் 22- பி ஆகும். 600 ஒளி ஆண்டுகள் தூரத்திலுள்ள இந்த கிரகம் பூமியைவிட 2.4 மடங்கு பெரிதானதாகும். ஆதன் வெப்பநிலை சுமார் 22 பாகை செல்சியஸ் ஆகும்.
இவ்வருட ஆரம்பத்தில் பிரெஞ்சு விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் உயிர் வாழத் தேவையான அம்சங்களைக் கொண்டிருக்கக்கூடிய கிரகமொன்றை கண்டறிந்ததாக அறிவித்தனர். எனினும் நாசாவினால் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட இத்தகைய முதல் கிரகம்  கெப்ளர் 22- பி என்பது குறிப்பிடத்தக்கது.
பூமிக்கு கிடைப்பதைவிட 25 சதவீதம் சூரியஒளி குறைவாகவே அதற்கு கிடைப்பதால்  மென்மையான வெப்பநிலை நிலவுகிறது. இது திரவ நிலையில் தண்ணீர் காணப்படுவதற்கான வாய்ப்பை வழங்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
          2005 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு ஏவப்பட்ட கெப்ளர் தொலைக்காட்டி சுமார் 155,000 நட்சத்திரங்களை அவதானித்து வருகிறது. இதுவரை இத்தொலைக்காட்டி மூலம் கிரகங்கள் என்ற அங்கீகாரம் பெறத்தக்கவை எனக் கருதப்படும் 2326 விண்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 207 கிரகங்கள் பூமி அளவிலானவையாகும்.
2

Wednesday, 4 January 2012

மலைப்பாம்புடன் விளையாடும் 6 மாதக் குழந்தை

மலைப்பாம்புடன் விளையாடும் 6 மாதக் குழந்தை-படங்கள்,காண

   6 மாத பெண் குழந்தையொன்று ஆளை விழுங்கும் மலைப்பாம்புடன் விளையாடி வரும் அதிசய சம்பவம் இந்திய மஹாராஷ்டிரா மாநிலத்தில் இடம் பெற்றுள்ளது.